/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு, அங்கன்வாடிகளில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள்; பணியாளர் சங்க பொது செயலாளர் வேதனை
/
சத்துணவு, அங்கன்வாடிகளில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள்; பணியாளர் சங்க பொது செயலாளர் வேதனை
சத்துணவு, அங்கன்வாடிகளில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள்; பணியாளர் சங்க பொது செயலாளர் வேதனை
சத்துணவு, அங்கன்வாடிகளில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள்; பணியாளர் சங்க பொது செயலாளர் வேதனை
ADDED : நவ 17, 2024 01:28 AM

ராமநாதபுரம்: ''-சமூக நலத்துறையில் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கின்றன,'' என, ராமநாதபுரத்தில் சமூக நலத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் துரைசிங் வேதனை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் சமூக நலத்துறை பணியாளர்கள் சங்க பொன் விழா மாவட்ட மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மாநில பொது செயலாளர் துரைசிங் அளித்த பேட்டி: சமூக நலத்துறையில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அலுவலர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும். சமூக நலத்துறைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பதவி உயர்வு வழங்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் உள்ளிட்ட காலியான 1200 பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் காலியான 50 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். முதுநிலைப் பட்டியலை உடன் வெளியிட வேண்டும்.
முத்தோர், இளையோருக்கிடையே உள்ள சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்துவது போல் சமூக நலப்பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. ஜன.,ல் நடக்கும் பொதுக்குழுவில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும் என்றார். மாநில தலைவர் ரவி, பொருளாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் பாலுசாமி, செயலாளர் முருகேஸ்வரி உடனிருந்தனர்.----

