/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்

ADDED : ஏப் 16, 2025 06:23 AM
பரமக்குடி: தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணத்திற்கு இந்தியா முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்தது. இதற்கான கட்டணத்தை வசூலித்து ஹஜ் ஏஜன்சிகள் மத்திய ஹஜ் கமிட்டிக்கு செலுத்தியுள்ளனர். மார்ச் 25க்குள் தொகையை சவுதி அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் மத்திய ஹஜ் கமிட்டி செலுத்தவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரசிடம் பேசி 52 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.