ADDED : ஜூலை 15, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் கடற்கரையில் ஷாம்பு பாக்கெட்டுகள் ஒதுங்கி கிடந்தது. இதனை அந்நாட்டு கடற்படை வீரர்கள் சேகரித்தனர். இதில் 5360 பாக்கெட்டுகள் இருந்தன. இதனை துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை வீரர்களின் ரோந்து கப்பலை கண்டதும் அதனை கடலில் துாக்கி வீசி விட்டு அவர்கள் தப்பியிருக்கலாம் என தெரிகிறது. துாத்துக்குடியில் இதில் தொடர்புடையவர்கள் யார் என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
