/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மறியல் 574 பேர் கைது: 3 இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மறியல் 574 பேர் கைது: 3 இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மறியல் 574 பேர் கைது: 3 இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மறியல் 574 பேர் கைது: 3 இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2025 02:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் செய்தவர்கள் 7 இடங்களில் மறியல் செய்ததில் 574 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற கோரியும் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. ராமநாதபுரத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் 29 பெண்கள் உட்பட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில் 39 பெண்கள் உட்பட 79 பேர் கைது செய்யப்பட்டனர். சிக்கல் தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் சிக்கல் தபால் அலுவலகம் முன்பு நடந்த மறியலில் உப்பள தொழிலாளர் சங்கத்தலைவர் பச்சமால் தலைமையில் 74 பெண்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திருவாடானை ஸ்டேட் பாங்க் முன்பு மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தலைவர் முத்துராமு தலைமையில் 8 பெண்கள் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர். சாயல்குடி தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்துார் தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் 20 பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர். கமுதிதபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துவிஜயன் தலைமையில் ஸ்டேட் பாங்க் முன்பு மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் ஏழு இடங்களில் நடந்த மறியலில் 185 பெண்கள் உட்பட 574 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை செயலாளர் செந்தில்வேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தொ.மு.ச., சார்பில் மாவட்ட செயலாளர் மலைக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜாக்டோ ஜியோ சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் நஜூமுதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் நிலை தடுமாறி விழுந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்த உபாதையும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.