/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலைவாய்ப்பு முகாமில் 576 பேர் பணி நியமனம்
/
வேலைவாய்ப்பு முகாமில் 576 பேர் பணி நியமனம்
ADDED : செப் 30, 2024 04:30 AM
ராமநாதபுரம்: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரகவாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்புமுகாமில் 576 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை - அறிவியல் கல்லுாரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முகாமை துவங்கி வைத்தார். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 576 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், மகளிர் திட்ட அலுவலர் சித்ரா, முகமது சதக் ஹமீது மகளிர் கலை-அறிவியல் கல்லுாரி முதல்வர் மீரா, உதவி திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.