sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் அருகே பஸ் கவிழ்ந்து ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்

/

ராமேஸ்வரம் அருகே பஸ் கவிழ்ந்து ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்

ராமேஸ்வரம் அருகே பஸ் கவிழ்ந்து ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்

ராமேஸ்வரம் அருகே பஸ் கவிழ்ந்து ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்


ADDED : ஜன 07, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆந்திரா பக்தர்களின் பஸ் கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.

ஆந்திரா குண்டூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 55 பேர் தனியார் பஸ்சில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அவர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டனர். காலை 7:45 மணிக்கு மண்டபம் காந்தி நகரில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. டிரைவர், பக்தர்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

பக்தர்கள் புகார் தரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us