ADDED : ஜன 31, 2025 01:58 AM

ராமேஸ்வரம்:இலங்கையில் விடுதலையான 6 மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.
ஜன.,12ல் இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜன.,22ல் படகின் டிரைவர்கள் கார்மேகம், பிரிஸ்மன் தவிர மற்ற மீனவர்கள் களஞ்சியம், முனீஸ்வரன், கண்ணன், பிரியன், மரியஜான் ரெமோரோ, சவேரியார் அடிமை ஆகிய 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்தது.
இந்த அபராதத்தை (இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.87 ஆயிரம்) செலுத்தியதால் நேற்று முன்தினம் இரவு விமான மூலம் மீனவர்கள் சென்னை வந்திறங்கினர். பின் நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் உள்ள உறவினர்களிடம் மீன்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சிறையில் உள்ள இரு மீனவர்களுக்கு தலா ரூ.60.50 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.17 லட்சத்து 54 ஆயிரத்து 500) விதித்ததால் இதனை செலுத்த முடியாமல் போனதால் 4 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.