/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
60 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
/
60 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : ஏப் 04, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே பேரையூரில் மளிகை கடையில் 60 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே பேரையூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் உத்தரவின் பேரில் பேரையூர் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையில் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர்.
பேரையூர் நாடார் தெரு காமராஜ் 63, செல்லப்பாண்டி 45, ஆகியோரின் மளிகை கடையில் சோதனை செய்த போது 60 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காமராஜ், செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

