/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் துாக்கு பாலத்தில் 600 டன் இரும்பு பட்டைகள் ஓரிரு நாளில் சோதனை

ADDED : செப் 28, 2024 02:48 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் 600 டன் இரும்பு பட்டைகள் ஏற்றப்பட்டது. ஓரிரு நாளில் பாலத்தை திறந்து மூடும் சோதனை நடக்க உள்ளது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் தற்போது பாலம் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது. 650டன் கொண்ட துாக்கு பாலத்தை ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 22 மீ., உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
துாக்கு பாலத்தை திறந்து மூட பாலத்தின் மேல் இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதற்காக துாக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகளை கிரேன் மூலம் ஏற்றி வருகின்றனர்.
இப்பணி முடிந்த பின் ஓரிரு நாளில் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடக்க உள்ளதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.