/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகாமில் 206 மாணவர்களுக்குரூ.6.77 கோடி கல்விக் கடன்
/
முகாமில் 206 மாணவர்களுக்குரூ.6.77 கோடி கல்விக் கடன்
முகாமில் 206 மாணவர்களுக்குரூ.6.77 கோடி கல்விக் கடன்
முகாமில் 206 மாணவர்களுக்குரூ.6.77 கோடி கல்விக் கடன்
ADDED : பிப் 16, 2024 05:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த சிறப்பு முகாமில் 206 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 77 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் கல்விகடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.
கலெக்டர் பேசியதாவது:
பிள்ளைகளின் உயர் கல்விக் கனவை பெற்றோர் நிறைவேற்றிட உறுதுணையாக இருக்க வேண்டும். உயர் கல்வியை பெரிய கல்லுாரியில் படிக்க வேண்டும். அல்லது வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்கும். அதனை நிறைவேற்ற அரசு வழங்கும் வழிகாட்டுதலை பயன்படுத்தி வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம்.
மாவட்டத்தில் 184 வங்கி கிளைகள் உள்ளன. இவ்வாண்டு கல்விக்கடன் இலக்கு ரூ.31 கோடியே 60 லட்சம். இதுவரை ரூ.25 கோடியே 8 லட்சம்வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 206 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரத்து 430 வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் மாரிச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், உதவி அலுவலர் அசோக், வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.