/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது
/
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது
ADDED : மார் 17, 2025 02:07 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த ரூ.60 லட்சம் மதிப்பிலான ரத்தினக்கல்லை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
மதுரைமாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்த பெருமாள் மகன் முனியசாமி 5. இவர் 30 ஆண்டாக நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர் தன்னிடம் அதிக விலைமதிப்பு கொண்ட 7 கிராம் எடையுள்ள அலெக்சாண்டர் வகை ரத்தினக்கல் ரசீதுடன் விற்பனைக்கு உள்ளதாக சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகிரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு ஜாகிர் திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை முனியசாமியிடம் அறிமுகம் செய்துள்ளார். ரவி, தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் என்பரை தொடர்பு கொண்டுள்ளார். செய்யது அபுதாஹிர் , அலெக்சாண்டர் கல்லுடன் ராமநாதபுரத்திற்கு முனியசாமியை அழைத்துள்ளார்.
காரில் ஜன., 24ல் முனியசாமி அக்கல்லுடன் ராமநாதபுரம் கீழக்கரை ரோடு ரயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது காரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த நபர்கள் முனியசாமியை மிரட்டி அலெக்சாண்டர் கல், ரசீது மற்றும் ரூ.15 ஆயிரம், அலைபேசியை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரை அடையாளம் கண்டு அதன் பிறகு காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
ஏழுபேர் கைது
இது தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை பிள்ளையார்கோயில் தெரு அபுதாஹிர் 38, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி முகமது அசாருதீன் 39, இளையான்குடி முகமது நவுபால் 39, துாத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முத்துசெல்வம் 29, தாளமுத்துநகர் காசிபாண்டி மகன் கனகராஜ் 25, இந்திராநகர் கருப்பசாமி மகன் கனகராஜ் 24, அத்திமரப்பட்டி மேற்கு தெரு ராஜாஜோஸ்குமார் 24 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான ரத்தினக்கல், ரசீது, ரூ.15 ஆயிரம், அலைபேசியை மீட்டனர். பணம் பறிக்க இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது:
ரத்தினக்கல்லின் மார்க்கெட் மதிப்பு ரூ. 80 லட்சம் வரை இருக்கும்.
இது 35 காரட் எடையுள்ளது. இங்குள்ள நகை மதிப்பீட்டாளர் கூறியபடி ரூ. 60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டுக்கள் என்றார்.