/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூலிப்படையை ஏவி மனைவி கொலை கணவர் உட்பட 7 பேர் கைது
/
கூலிப்படையை ஏவி மனைவி கொலை கணவர் உட்பட 7 பேர் கைது
கூலிப்படையை ஏவி மனைவி கொலை கணவர் உட்பட 7 பேர் கைது
கூலிப்படையை ஏவி மனைவி கொலை கணவர் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2025 12:34 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் அருகே வெட்டுக்காடு பகுதியில் குழந்தைகள் கண் முன் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவரான துணை ராணுவப்படை வீரர் விஜய கோபால், துாத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகோபால் 40. இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தை சேர்ந்த ஜெர்மின் 34,என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர்.
இவர்களுக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தைகளுடன் ஜெர்மின் வெட்டுக்காடு பகுதியில் உள்ள வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஜூலை 17 இரவு குழந்தைகள் கண் முன்பே ஜெர்மின் முகமூடி அணிந்து வந்தவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சாயல்குடி போலீசார் விசாரணையில் ஜெர்மின் கணவர் விஜயகோபால் துாண்டுதலில் கன்னிராஜபுரத்தை சேர்ந்த சங்கர் 48, வெள்ளப்பட்டி சேர்மன் 40, விஜயகோபாலின் தந்தை வயனக்கண் 70, வடக்கு செவல் மாரியப்பன் 48, ஆகியோருடன் கூலிப்படையினர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் விஜய கோபால் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கூலிப்படையினரான துாத்துக்குடியை சேர்ந்த அசோக் (எ) அரவிந்த் 25, காளிராஜ் (எ) கட்டக்காளி 35, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ஜெர்மினுக்கு பலருடன் தொடர்பு, முதுகுளத்துார் நீதிமன்றத்தில் உள்ள ஜீவனாம்ச வழக்கு ஆகியவற்றால் ஆத்திரமடைந்து உறவினர், கூலிப்படையினருடன் சேர்ந்து கொலை செய்ததாக விஜயகோபால் விசாரணையில் தெரிவித்தார்.

