/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனியார் நெசவாளருக்கு 7 சதவீதம் கூலி உயர்வு
/
தனியார் நெசவாளருக்கு 7 சதவீதம் கூலி உயர்வு
ADDED : ஜன 30, 2024 12:16 AM
பரமக்குடி, - பரமக்குடியில் உள்ள தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு மற்றும் பரமக்குடி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தனியார் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு உடன்படிக்கை பேச்சு வார்த்தை நடந்தது.
போராட்டக் குழு கன்வீனர் கோவிந்தன் தலைமை வகித்தார். உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். போராட்ட குழு கன்வினர் குப்புசாமி வரவேற்றார்.
இரு தரப்பு பேச்சு வார்த்தையில் 2025 பிப்.1 முதல் தனியார் நெசவாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் ஏ.ஐ.டி.யு.சி.,சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி., ராமச்சந்திரன், ஜே.டி.எல்.எப்., நாகநாதன், ஏ.டி.பி., ராமநாதன், சி.ஐ.டியு., முரளி, பி.எம்.எஸ்.,ராமதாஸ், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் லோகநாதன், சங்கர், கணேஷ்பாபு, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.