ADDED : மார் 04, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவித்தும், இருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜன.,13ல் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 7 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் படகின் உரிமையாளர் என்பதால் ரூ.40 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.11.60 லட்சம்) அபராதமும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
