/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
700 சிறப்பு பஸ்கள் *கும்பகோணம் கோட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு.. *ஜன.11- 14 வரையிலும், ஜன.16-18 வரை இயக்கம்
/
700 சிறப்பு பஸ்கள் *கும்பகோணம் கோட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு.. *ஜன.11- 14 வரையிலும், ஜன.16-18 வரை இயக்கம்
700 சிறப்பு பஸ்கள் *கும்பகோணம் கோட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு.. *ஜன.11- 14 வரையிலும், ஜன.16-18 வரை இயக்கம்
700 சிறப்பு பஸ்கள் *கும்பகோணம் கோட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு.. *ஜன.11- 14 வரையிலும், ஜன.16-18 வரை இயக்கம்
ADDED : ஜன 07, 2024 04:11 AM

ராமநாதபுரம்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11 முதல் 14 வரையிலும், ஜன.16 முதல் 18 வரை தினசரி 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூறியிருப்பதாவது:
சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலுார், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு ஜன.11 முதல் 14 வரை தினசரி 700 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகி இடங்களுக்கு மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும், முக்கிய நகர் பகுதிகளில் இருந்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நவ.9 முதல் 11 வரை சென்னையில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோண்ம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் தாம்பரம் சானிட்டோரியம் அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும்.
கரூர், திருச்சி, அரியலுார், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்துார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும்.
இதன்படி 3145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து தங்களது ஊர்களுக்கு திரும்ப ஜன.16 முதல் 18 வரை 2611 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு பயணம் செய்யும் பயணிகள் பஸ் டிக்கெட்டுகளை www.tnstc.in என்ற இணையதள ஆப் மூலம் அலைபேசியில் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவிற்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், என கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். -------
----