/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
700 ஆண்டு பழமையான பைரவர் சிலை கண்டெடுப்பு
/
700 ஆண்டு பழமையான பைரவர் சிலை கண்டெடுப்பு
ADDED : டிச 04, 2024 12:54 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் ஊராட்சி மாங்குடியில் பழமையான அம்மன் சிலை இருப்பதை, தொல்லியல் ஆர்வலர் சிவா கண்டார்.
இச்சிலை குறித்து, மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வரலாற்று துறை தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கள ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இச்சிலை, பிற்கால பாண்டியர்களின் 13 அல்லது 14ம் நுாற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை. சிவபெருமானின், 64 வடிவங்களில் பைரவர் வடிவம் ஒன்று.
இச்சிலை, நிர்வாண கோலத்தில் நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. உடலில் ஆபரணங்கள் தெளிவாக தெரியாத நிலையில் இந்த பைரவரை, கிராமத்தினர் அம்மனாக வழிபடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.