/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலேசியாவில் இருந்து கொடுத்து அனுப்பிய 73 பவுன் நகை மோசடி
/
மலேசியாவில் இருந்து கொடுத்து அனுப்பிய 73 பவுன் நகை மோசடி
மலேசியாவில் இருந்து கொடுத்து அனுப்பிய 73 பவுன் நகை மோசடி
மலேசியாவில் இருந்து கொடுத்து அனுப்பிய 73 பவுன் நகை மோசடி
ADDED : ஆக 08, 2025 02:25 AM

ராமநாதபுரம்:மலேசியாவிலிருந்து உறவினர் திருமணத்திற்காக தாயாருக்கு தொழிலாளி கொடுத்து அனுப்பிய 73 பவுன் நகைகளை திருப்பி தராமல் மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது தம்பியை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துார் கிழக்குத்தெருவைச் சேர்ந்த குப்பை முகமது மனைவி ரம்ஜான் பீவி 60. இவரது தம்பியின் மகள் திருமணத்திற்காக 73 பவுன் நகைகளை மலேசியாவில் பணி புரியும் ரம்ஜான் பீவியின் மகன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நகைகளை வாங்க ரம்ஜான்பீவியால் மலேசியாவிற்கு செல்ல முடியவில்லை.
இதனால் மலேசியாவிற்கு வந்திருந்த ராமநாத புரத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராகிம் மகன் முகமது பகத், அவரது தம்பி முகமது பஜரத், லுக்மான் ஹக்கிம் மனைவி செய்யனும் சுலைஹா, நைனா முகமது மகள் முகம்மதியா பானுவிடம் 73 பவுன் நகைகள் மற்றும் அதற்கான ரசீது நகல்களை ஆக.,1ல் ரம்ஜான் பீவி மகன் கொடுத்து அனுப்பினார்.
ராமநாதபுரம் வந்த முகமது பகத் 27, முகமது பஜரத் 24, ஆகியோர் அந்த நகைகளை திரும்பி தராதததுடன் ரம்ஜான் பீவியையும் தாக்கி, நகைகள் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டினர்.
இது தொடர்பாக ரம்ஜான் பீவி ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் முகமது பகத்தை ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் முகமது பஜரத்தை தேடி வருகின்றனர்.