/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய புள்ளியியல் துறை 75ம் ஆண்டு விழா; ராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஏப் 30, 2025 06:29 AM

ராமேஸ்வரம்; மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அலுவலகத்தின் 75ம் ஆண்டு விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளிகள் அலுவலகத்தின் 75ம் ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி விருதுநகர் தேசிய புள்ளியல் அலுவலகம் சார்பில் இதன் உதவி இயக்குனர் ரத்தினம் தலைமையில் நேற்று ராமேஸ்வரத்தில் மேல ரத வீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அப்பாஸ் கொடியசைத்து துவக்கினார். ஊர்வலத்தில் தேசிய புள்ளியல் அலுவலகத்தின் 75ம் ஆண்டு விழா மது மற்றும் போதை எதிர்ப்பு, பெண் கல்வி, லஞ்ச ஊழல் எதிர்ப்பு, துாய்மை இந்தியா போன்ற விழிப்புணர்வு வாசக பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.