ADDED : பிப் 05, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., பி.லிட்., இணைந்து கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. டிப்ளமோ முடிக்க இருக்கும் இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் வரவேற்றார். சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., பி.லிட்., மனித வள மேம்பாட்டு முதன்மை அலுவலர் வேல்முருகன் நேர்முகத்தேர்வு நடத்தினார். 86 மாணவர்கள் கலந்து கொண்டனர். 76 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.17,200 சம்பளத்துடன் உணவு, சீருடை வசதிகள் செய்து தரப்படும் என நிறுவத்தினர் தெரிவித்தனர். மின்னணுவியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.