/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே சாலைப்பணி எதிர்த்தவர்கள் 8 பேர் கைது
/
கமுதி அருகே சாலைப்பணி எதிர்த்தவர்கள் 8 பேர் கைது
ADDED : மார் 14, 2024 10:49 PM

கமுதி, - கமுதி அருகே கீழநரியன்கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தாசில்தார் சேதுராமன் தலைமையில் கிடப்பில் உள்ள சாலை பணி முடிக்கப்பட்டது. பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே வல்லந்தை ஊராட்சி கீழநரியன்கிராமத்தில் 800 மீ.,ல் ரூ.49.56 லட்சத்தில் 2022--23ம் ஆண்டு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி ஆக., மாதம் தொடர்ந்து நடந்தது. பின் சாலை பெயர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டி சமன் செய்தனர்.
சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். திட்டப்பணி காலம் ஜன.,ல் முடிந்தாலும் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் விடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டி உள்ளதால் டூவீலரில் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜன.12ல் சமாதான கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து வழக்கு தொடர்ந்த நிலையில் உயர்நீதிமன்றம்மதுரை கிளை சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி தாசில்தார் சேதுராமன் தலைமையில் கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் முன்னிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்புகளை மணல் அள்ளும் இயந்திரத்தில் அகற்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 8 பேர் பணி செய்ய விடாமல் தடுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
மண்டலமாணிக்கம் போலீசார் அவர்களை தடுத்து கருப்பையா, தங்கப்பாண்டி, இளையராஜா, கன்னிராஜா சேகரன்,ராமலட்சுமி, புஷ்பவள்ளி, பாண்டியம்மாள், சத்தியபாமா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

