/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரே பள்ளியில் 8 மாணவர்கள் மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
/
ஒரே பள்ளியில் 8 மாணவர்கள் மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
ஒரே பள்ளியில் 8 மாணவர்கள் மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
ஒரே பள்ளியில் 8 மாணவர்கள் மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
ADDED : ஜன 24, 2025 04:29 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் குத்துச்சண்டையில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.இதில் பரமக்குடி, முதுகுளத்துார் உட்பட 8 குறு வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கனிஷ்மதி, கோவிந்த சிவா, யுவதில்லை ராஜன், கதிரவன், செல்வகணேஷ், சிவபாரதி, செல்வ சக்திவேல், லத்திகா கரண் ஆகியோர் வெவ்வேறு எடை பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.
ஒரே பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி ஆகியோரை தாளாளர் சாகுல் ஹமீது, தலைமையசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.