/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
800 கிலோ வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்
/
800 கிலோ வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்
ADDED : ஆக 25, 2025 11:47 PM

ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தலைதோப்பு அருகே சிலர் டிராக்டரில் இருந்து மூடைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்களில் சிலர் டிராக்டருடன் தப்பி ஓடிவிட்டனர்.
பெருங்குளத்தை சேர்ந்த தீபக்ராஜா 26, உதயகண்ணன் 19, ரெட்டையூரணியை சேர்ந்த காளீஸ்வரன் 21, ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் இறக்கிய மூடைகளை சோதனை செய்த போது அதில் தலா 80 கிலோ கொண்ட வலி நிவாரணியாக பயன்படுத்தும் பிரகபலின் எனும் மாத்திரை 10 பெட்டிகளில் இருந்தது. 800 கிலோ மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.