ADDED : ஆக 15, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி:தொண்டி அருகே 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பழயணக்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.
ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முதுகுளத்துாரை சேர்ந்த டிரைவர் திருக்கண்ணன் 35, என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காரைக்குடி புதுவயலில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.