/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 80,000 பேர் சம்பளம் வராமல் தவிப்பு

ADDED : அக் 03, 2024 03:16 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் 80 ஆயிரம் தொழிலாளர்கள் வங்கி சர்வர் பழுது காரணமாக இம்மாத சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 70 சதவீதம் பேர் ஸ்டேட் வங்கி மூலம் இ.சி.எஸ். முறையில் சம்பளம் பெற்று வருகின்றனர். இந்தியன் வங்கி உட்பட தனியார் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஸ்டேட் வங்கி கணக்கிற்கும் பணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. தாமதமாகி வருகிறது.
காரைக்குடி மண்டல பொதுச் செயலாளர் (சி.ஐ.டி.யு.,) தெய்வீரபாண்டியன்: உடனடியாக சம்பளம் வழங்க அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகமும், ஸ்டேட் வங்கி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.