/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மே மாதத்தில் 827 வாகனங்கள் சோதனை 34 பேர் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட்
/
மே மாதத்தில் 827 வாகனங்கள் சோதனை 34 பேர் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட்
மே மாதத்தில் 827 வாகனங்கள் சோதனை 34 பேர் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட்
மே மாதத்தில் 827 வாகனங்கள் சோதனை 34 பேர் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 20, 2025 11:44 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மே மாதம் 827 வாகனங்களை சோதனையிட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபாரதம் விதித்தனர். விபத்து, மது போதையில் வாகனம் ஓட்டிய 34 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் மே மாதத்தில் 827 வாகனங்களை சோதனையிட்டனர். அதில் அதிக பாரம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, புகை மாசு சான்றிதழ், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் உட்பட 156 வாகனங்களுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை வழங்கப்பட்டது.
அனுமதி சீட்டு இல்லாமல் வாகனம் இயக்குவது, தகுதி சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 32 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.
மது போதையில் வாகனங்கள் ஓட்டியவர்கள், விபத்துக்களை ஏற்படுத்திய ஓட்டுநர்களின் 34 உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. இந்த சோதனையில் ரூ.81 ஆயிரத்து 740 வரி வசூலிக்கப்பட்டது. விதி மீறல் வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரூ.6 லட்சத்து 9500 அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்களை சோதனையிடப்பட்டதில் 21 வாகனங்களுக்கு ரூ.81 ஆயிரத்து 740 வரி வசூலிக்கப்பட்டுள்ளது.