/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
/
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
ADDED : நவ 19, 2025 07:24 AM

பரமக்குடி: பரமக்குடியில் வ.உ.சி., 89 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காட்டுப்பரமக்குடியில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை நிறுவனத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.
சபை மற்றும் வ.உ.சி., மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், குரு சுப்பிரமணியம், சவரி முத்து, ராமநாதன், மகேஸ்வரன், கோவிந்தன், செந்தில், முனியாண்டி, ரமேஷ்பாபு, நாகேந்திரன், கணபதி, பன்னீர்செல்வம், கண்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பள்ளியில் உள்ள வ.உ.சி., சிலைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி சுதந்திரத்திற்கு போராடிய அவரைப் பற்றி நினைவு கூர்ந்தனர். பின்னர் நிர்வாகிகள் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி., மணிமண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.

