/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது
/
ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது
ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது
ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது
ADDED : ஜூன் 13, 2025 11:37 PM
கீழக்கரை: ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் காவலாளியை தாக்கிய 9 பேரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் ஒன்பது பேர் குடிபோதையில் காட்டுப்பள்ளி தர்கா அருகே உள்ள வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர். இதை பார்த்த காவலாளி அந்தோணி 34, தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காவலாளியை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்தார். இது குறித்து ஏர்வாடி தர்கா போலீசில் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி தர்காவை சேர்ந்த தமீமுன் அன்சாரி, சீனி முகம்மது, அமர்நாத், செய்யது இப்ராஹீம், முகமது அஷ்ரப், முனீஸ்வரன் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.
ஏர்வாடி தர்கா, காட்டு பள்ளிவாசல் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.