/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
/
லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ADDED : ஜூலை 29, 2025 11:15 PM
ராமநாதபுரம்; திருவாடானை கைகாட்டி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., அருண் தலைமையிலான போலீசாரும், பறக்கும் படை தாசில்தார் தமீம்ராசா ஆகியோர் திருவாடானை கைகாட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில் 228 மூடைகளில் 9120 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம்நகர் பழனி மகன் கிேஷார் 23, சாலைக்கிராமம் புதுரோடு பகுதியை சேர்ந்த வைரவசுந்தரம் மகன் மணிமுத்து 29, ஆகியோரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசியை இவர்களுக்கு வழங்கிய காளையார்கோவில், மறவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.