/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை
/
90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை
ADDED : மார் 29, 2025 06:40 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம்மாவட்டம் மன்னார் வளைகுடா மண்டபம், ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிகமாக கடல் அட்டைகள் உள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பநிலை மாற்றத்தால் கடலில் கூடுதலாக இவற்றை காண முடியும்.
அழிந்து வரும் அரிய வகையான இவற்றை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனினும் மருத்துவ குணம் உள்ளது என்ற நம்பிக்கையில் இதனை சட்ட விரோதமாக பிடித்து வேக வைத்து காய்ந்த கடல் அட்டைகளுக்கு கிலோ ரூ.10 ஆயிரம் வரை சந்தையில் விலை கிடைப்பதால் சிலர் வெளி நாடுகளுக்கு கடத்துகின்றனர்.நேற்று முன்தினம் காலை தேவிபட்டினம் நவபாஷாண கடலில் ரோந்து சென்ற சுங்கத் துறையினர் படகு ஒன்றில் கடல் அட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து ராமநாதபுரம் வனச்சரகர் திவ்லட்சுமி, பாரஸ்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் படகு, 90 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து அதில்இருந்த 15 வயது சிறுவனை பிடித்தனர். எங்கு கடத்தப்பட இருந்தது, தொடர்புடையவர்கள் குறித்து மேல்விசாரணை நடக்கிறது.