தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நிகழ்வில் 92,000 மாதிரி ஓட்டெடுப்பு

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நிகழ்வில் 92,000 மாதிரி ஓட்டெடுப்பு

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நிகழ்வில் 92,000 மாதிரி ஓட்டெடுப்பு


ADDED : ஏப் 21, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு கருவிகளை இயங்கும் நிகழ்ச்சியில் 92 ஆயிரம் மாதிரி ஓட்டெடுப்பு நடத்தி சரிபார்க்கப்பட்டது.

நான்கு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்புக் கருவிகளை (வி.வி.பேட்), சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் ஏப்.,16 முதல் 18 வரை பரமக்குடி, திருவாடனை தொகுதிகளில் தாலுகா அலுவலகங்களிலும், ராமநாதபுரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரக் கிடங்கு மற்றும் முதுகுளத்துாரில் ஒழுங்குமுறை சந்தைக் கிடங்கு ஆகிய இடங்களில் வைத்து இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் ஏஜென்ட்கள் பங்கேற்றனர். அவர்கள் மூலம் தோராயமாகத் தேர்வு செய்த 5 சதவீதம் அதாவது 92 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கருவி (வி.வி.பேட்) காகித சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. தலா 1000 ஓட்டுக்கள் பதிவு செய்து மாதிரி ஓட்டெடுப்பு நடந்தது.

இதன்படி 92 ஆயிரம் வாக்காளர் சரிபார்ப்பு அட்டைச் சீட்டுகள் எண்ணப்பட்டு, அவை வாக்காளர் குழுவின் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இந்தியத் தேர்தல் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட சேமிப்பு, பாதுகாப்பு நெறிமுறையின் படி இந்த இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று (ஏப்., 22ல்) அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. ------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us