/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் தொகுப்பு 94 சதவீதம் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு 94 சதவீதம் வழங்கல்
ADDED : ஜன 15, 2024 11:18 PM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பொங்கல் தொகுப்பு 94 சதவீதம் வழங்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்பு அரசு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கபட்டது.
திருவாடானை தாலுகாவில் 39,466 பேர் பொங்கல் தொகுப்பு பெற தகுதியானவர்களாக இருந்தனர். ரேஷன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர். இதையடுத்து கடந்த சில நாட்களாக பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் வழங்கி வந்தனர்.
பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று பொங்கல் தொகுப்பை பெற்றனர். இது குறித்து திருவாடானை தாலுகா சிவில் சப்ளை அலுவலர் சிவசண்முகம் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் 94 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. பொங்கல் தொகுப்பை அரசு அறிவித்த தேதிகளில் முழுமையாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்.