/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 945 கிலோ பீடி இலை பறிமுதல் *தினமலர் செய்தி எதிரொலி

ADDED : பிப் 04, 2025 04:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை அருகே பண்டார முனிசாமி கோயில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 945 கிலோ பீடியிலை பண்டல்கள், இரு மினி சரக்கு வாகனங்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
'தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் இலங்கையில் மட்டுமே பிடிபடுகிறது. தமிழகத்தில் இருந்து கடத்தும் போது அதிகாரிகள் தடுப்பதில்லை' என இரு தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் எஸ்.ஐ., பரமகுருநாதன், ஏட்டுகள் ராஜேந்திரன், ராமர், செந்தில்குமார் ஆகியோர் சேதுக்கரை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இங்குள்ள பண்டார முனிசாமி கோயில் கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். கியூ பிரிவு போலீசாரை கண்டதும் படகில் ஏறி கடலுக்குள் தப்பிச் சென்றனர். கரையில் கிடந்த 35 கிலோ எடை கொண்ட 27 பீடி இலை மூடைகளையும்(945 கிலோ), இரு சரக்கு வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.