/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
/
ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
ADDED : ஜன 04, 2024 02:03 AM

ராமநாதபுரம்: -தேவிபட்டினத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக செல்லும் வழியில் பெண் குழந்தை பிறந்தது.
தேவிபட்டினத்தை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், இவரது மனைவி அனுசியா 26. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் 108 ஐ அழைத்தனர். தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வரும் வழியில் மரப்பாலம் பகுதியில் அனுசியாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் அவசர கால மருத்துவ நுட்புனர் எம்.பிரியா, டிரைவர் கார்த்திக் உதவியுடன் ஆம்புலன்சில் அனுசியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின் அனுசியா ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டார். குடும்பத்தினர், ஊர் மக்கள்ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டினர்.