/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வகுப்பறையில் ஆபாச பேச்சு ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
/
வகுப்பறையில் ஆபாச பேச்சு ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
வகுப்பறையில் ஆபாச பேச்சு ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
வகுப்பறையில் ஆபாச பேச்சு ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 03, 2024 02:15 AM

பரமக்குடி,:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் முதுகலை விலங்கியல் ஆசிரியர் வெங்கடேசன், 55. இவர், பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்தியபோது, மாணவியர் மத்தியில் ஆபாசமாக பேசி, இனப்பெருக்கம் தொடர்பான படங்களை காண்பித்து, ஆபாசமான விளக்கம் கூறி, பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் பேசியதாக, தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகரிடம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆக., 29ல் புகார் அளித்தார்.
இதன்படி, தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில், வெங்கடேசன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
பள்ளியில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வெங்கடேசனை தாளாளர் லெனின்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்த அலமேட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், கடந்த செப்., 21ல் வந்த அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கலெக்டர் உமா காரை, பெற்றோருடன் மாணவியர் முற்றுகையிட்டனர். 'அலமேடு அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் படிக்கும் மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை' என, புகாரளித்தனர்.
இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு சென்று, 100க்கும் மேற்பட்ட பெற்றோர், மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தி, கலெக்டர் உமாவிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ரவிசெல்வம், அலமேடு அரசு பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட, மூன்று பேரை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.