/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட மாடு
/
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட மாடு
ADDED : ஜன 22, 2024 04:53 AM

திருவாடானை: வெறிநாய் கடித்த பசுமாடு ஒன்று நடந்து சென்ற வர்களை விரட்டியதால் அச்சமடைந்தனர்.
திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருக்களில் சிதறிக் கிடக்கும் இறைச்சி கழிவுகளை தின்றுவிட்டு வெறி நாய்கள் சுற்றித் திரிகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சூச்சனி, தினைக்காத்தான்வயல் போன்ற கிராமங்களில் நடந்து சென்ற பெண்கள் உட்பட 16 பேரை கடித்தது. அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நேற்று திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயில் அருகே நடந்து சென்றவர்களை வாயில் நுரை தள்ளியபடி வெறி நாய் கடித்த பசுமாடு ஒன்று விரட்டியது. அப்பகுதி மக்கள் அச்சமடைந்து திருவாடானை தீயணைப்புத்துறையினருக்கு தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று மாட்டை பிடித்து மரத்தில் கட்டினர்.