/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை தோணி பாலம் அருகே ஆபத்தான பள்ளம்
/
கீழக்கரை தோணி பாலம் அருகே ஆபத்தான பள்ளம்
ADDED : நவ 25, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரையில் இருந்து திருப்புல்லாணி செல்லும்கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தோணி பாலம் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை தோணி பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளங்கள் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் உருவாகியுள்ளது.
இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளிச்சம் குறைவால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் ஓரம் கட்டும் போது டூவீலர் ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.