ADDED : ஜன 13, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சந்தாங்கியில் புதிய பயணியர் நிழற்குடை அருகே உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பஞ்சந்தாங்கியில் திருப்புல்லாணி - ரெகுநாதபுரம் செல்லும் ராணி மங்கம்மாள் சாலை செல்கிறது. இங்கு பயணியர் நிழற்குடை புதிதாக அமைக்கப்படுகிறது. இதனருகே கைக்கொள்வார் மடம் ஊருணிக்கு செல்லும் வரத்துக்கால்வாய் சேதமடைந்து சாலையோரத்தில் பள்ளம் உள்ளது.
இவ்வழியாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.