sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துாங்க விடாமல் செய்வதே கனவு..அது நனவாகும் வரை உழைத்தால் வெற்றி இன்று அக்னி நாயகன் அப்துல் கலாம் பிறந்த நாள்

/

துாங்க விடாமல் செய்வதே கனவு..அது நனவாகும் வரை உழைத்தால் வெற்றி இன்று அக்னி நாயகன் அப்துல் கலாம் பிறந்த நாள்

துாங்க விடாமல் செய்வதே கனவு..அது நனவாகும் வரை உழைத்தால் வெற்றி இன்று அக்னி நாயகன் அப்துல் கலாம் பிறந்த நாள்

துாங்க விடாமல் செய்வதே கனவு..அது நனவாகும் வரை உழைத்தால் வெற்றி இன்று அக்னி நாயகன் அப்துல் கலாம் பிறந்த நாள்


ADDED : அக் 15, 2024 05:02 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: இந்திய வரைபடத்தில் ராமேஸ்வரம் எனும் கடைக்கோடி தீவில் பிறந்து நம் தேசத்தின் முதல் குடிமகனான அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செ.மணிவண்ணன் கூறியிருப்பதாவது:

ஏவுகணை நாயகன்


இந்திய விண்வெளியில் அக்னி ஏவுகணை ஆகாயத்தை கிழித்த போது வல்லரசு தேசமெல்லாம் வானளாவிய ஆச்சரியத்தோடு இந்தியாவை பார்த்தது. பொக்ரானில் அணுகுண்டு நிலத்தை பிளந்த போது கேட்ட பேரொளியால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து மிரண்டு போனது. இந்த வெற்றிகளின் பின்னணியில் இருந்தவர் ஏவுகணை நாயகன் அவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்.

கனவு நாயகன் கலாம்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆரம்பக்கல்வியை ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயரிடம் பயின்றார். ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி ஆசிரியர் அய்யாதுரை சாலமன்,திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி பேராசிரியர்களான தோத்தாத்ரி ஐயங்கார் மற்றும் சூரிய நாராயண சாஸ்திரிகள் ஆகியோரால் பக்குவப்பட்ட மாணவராகினார்.

எம். ஐ. டி., பேராசிரியர்களான ஸ்பான்டர், பண்டலை, நரசிங்கராவ் ஆகியோர் அப்துல் கலாமின் அறிவுப்பசிக்கு தீனி போட்டதால் அவர் கண்ட கனவெல்லாம் நனவாகியது. அதனால் தான் இளைஞர்களிடையே உரையாற்றும் போதெல்லாம் ''கனவு காணுங்கள்'' என்றார்.

துாங்கும் போது வருவதல்ல கனவு. நம்மை துாங்க விடாமல் செய்வதே கனவாகும். அந்த கனவு நனவாகும் வரை லட்சியத்தோடு கடினமாக உழைத்தால் அதை அடைய முடியும் என்று இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கையை கலாம் விதைத்தார்.

குழந்தைகளைக் கொண்டாடிய கலாம்


குஜராத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களோடு கலாம் உரையாடிய போது ஒரு மாணவன் நீங்கள் யாரை முன்மாதிரியாக பின்பற்றி வாழ்கிறீர்கள் என கேட்டதற்கு, நான் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களைப் பின்பற்றி வாழ்வதாக கூறினார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர். அதாவதுமகாத்மா காந்தியடிகள் பரந்த கண்ணோட்டம் கொண்டவர். நம் நாடு ஈன்றெடுத்தஈடு இணையற்ற சமாதான துாதர்.சர்தார் வல்லபாய் பட்டேல் நம் தேசத்தை ஒன்றுபடுத்தி நமக்கு உறுதியையும் வலிமையையும் அளித்தவர்.

பேராசிரியர் விக்ரம் சாராபாய் என்னுடைய குரு. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் இந்தியாவை பெரிதும் வலிமை வாய்ந்த நாடாக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் என்றார்.

கடைக்கோடியில் பிறந்த முதல் குடிமகன்


கலாம் ஆரம்பக் கல்வியை ராமேஸ்வரத்தில் தொடங்கி விண்வெளி பொறியியல் படிப்பை சென்னை எம்.ஐ.டி.,யில் முதுகலை பட்டம் பெற்று அதன் பின் டி.ஆர்.டி.ஓ.,ல் விஞ்ஞானியாக வாழ்க்கையைத் துவக்கினார்.அதன் பிறகு இந்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஏவுகணை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டார்.

ரஷ்யாவும் அமெரிக்காவும் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி கோலோச்சிய காலத்தில் எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் ரோகிணி I என்ற செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பின்னர் அக்னி, பிரித்வி, ஆகாஷ் ஏவுகணை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.2002 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது ஜனாதிபதி ஆனார். கடைக்கோடியில் பிறந்து இந்திய தேசத்தின் முதல் குடிமகனாகவும், மக்கள் ஜனாதிபதி எனவும் எல்லோராலும் போற்றப்பட்டார்.

கலாமின் லட்சியம்


இந்த மாபெரும் நாட்டில்நான் நன்றாகவேஇருக்கிறேன்.இங்கே நான் கோடிக்கணக்கானசிறுவர் சிறுமிகளைபார்க்கிறேன்.எனக்குள்ளிருந்துஅவர்களின் வற்றாதபுனிதத்தை முகர்ந்துஇறைவனின் அருளை எங்கும் பரப்ப வேண்டும்.ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைக்கிற மாதிரி.

இந்த தேசத்தில் உள்ளவர்கள் யாவருமே தங்களை அற்பமானவர்கள் என்றோ, நிராதரவானவர் என்றோ எப்போதும் நினைக்க கூடாது.கோடான கோடி இந்திய இளைஞர்களிடத்தில் ஒரு தெய்வீக அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

அதன் பொன் னொளியை இந்த உலகத்திற்கு பரப்புவதே அவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே கலாமின் லட்சியமாக இருந்தது. அவரின் கனவை நனவாக்கும் ஒவ்வொரு இளைஞனும் ஆகலாம் அப்துல் கலாமாக என்றார்.






      Dinamalar
      Follow us