/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் கழன்ற பிரேக் ஷூ முகத்தில் பட்டு விவசாயி பலி
/
ரயிலில் கழன்ற பிரேக் ஷூ முகத்தில் பட்டு விவசாயி பலி
ரயிலில் கழன்ற பிரேக் ஷூ முகத்தில் பட்டு விவசாயி பலி
ரயிலில் கழன்ற பிரேக் ஷூ முகத்தில் பட்டு விவசாயி பலி
ADDED : அக் 26, 2024 08:49 PM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தண்டவாளம் அருகில் சென்று கொண்டிருந்த விவசாயி முகத்தில், ஓடும் ரயிலிலில் இருந்து, வீல் பிரேக் ஷூ கழன்று தெறித்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு, 61. இவர், நேற்று காலை விவசாய பணிக்காக அப்பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
காலை, 7:35 மணிக்கு அந்த வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி பாசஞ்சர் ரயில் சென்றது.
திடீரென ரயில் சக்கரத்தின் இரும்பால் ஆன பிரேக் ஷூ கழன்று மின்னல் வேகத்தில் தெறித்தது. அது, சண்முகவேலு முகத்தில் பட்டு, முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.