/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புகையிலை விற்ற கடைக்கு நோட்டீஸ் 3 முறை சிக்கினால் ரூ.1 லட்சம் அபராதம்

ADDED : ஜன 06, 2024 05:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர். தொடர்ந்து 3 முறை பிடிப்பட்டால் ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்செந்தில்குமார், போலீசார், சுகாதாரத்துறையினர் இணைந்து போகலுார்,சத்திரக்குடியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற ஒரு கடையை மூடி நோட்டீஸ் வழங்கி ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் புகையிலைப் பொருட்களை விற்றால் அபராதத் தொகை அதிகமாக வசூலிக்கப்படும்.
முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 15 நாட்கள் கடை பூட்டப்படும். 2வது முறை பிடிபட்டால் ரூ. 50ஆயிரம் அபராதத்துடன் 30 நாட்களும், மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபராதத்துடன் 90 நாட்கள் கடை மூடப்படும். உரிமம்ரத்து செய்யப்படும்என கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.