/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுப்பன்றியை பிடித்தவருக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
/
காட்டுப்பன்றியை பிடித்தவருக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
காட்டுப்பன்றியை பிடித்தவருக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
காட்டுப்பன்றியை பிடித்தவருக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
ADDED : டிச 05, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ; பரமக்குடி வனத்துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற டூவீலரை சோதனையிட்டனர். அதில் 2 வயதுள்ள பெண் காட்டுப்பன்றி உயிருடன் கட்டப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம் மணலுாரை சேர்ந்த பொன்படி 48, இறைச்சிக்காக வலை வைத்து பிடித்தது தெரிய வந்தது. மாவட்ட வன அலுவலர் ஹேமலதா காட்டுப்பன்றியை மீட்டு பொன்படிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
காட்டுப்பன்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டது. வனப்பகுதியிலோ, அதற்கு வெளியிலோ வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.