/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைக்கவசம் அணியாத 20 பேருக்கு ரூ.1000 அபராதம்
/
தலைக்கவசம் அணியாத 20 பேருக்கு ரூ.1000 அபராதம்
ADDED : பிப் 19, 2024 11:18 PM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 20 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிகம் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக்முகமது வாகன ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து எஸ்.ஐ., மகேந்திரன் ஆகியோர் ராமநாதபுரம் நகர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தலைக்கவசம் அணியாமல் சென்ற 20 பேருக்கு தலா 1000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். தலைக்கவசம் அணிந்து செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

