/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரையூரில் புதர் மண்டிய உடற்பயிற்சி நிலையம்
/
பேரையூரில் புதர் மண்டிய உடற்பயிற்சி நிலையம்
ADDED : ஏப் 07, 2025 06:43 AM

கமுதி : கமுதி அருகே பேரையூரில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் சேதமடைந்து புதர் மண்டியுள்ளது.
கமுதி அருகே பேரையூர் அதனை சுற்றியுள்ள இளைஞர்கள், பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், நடைப்பயிற்சி செய்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை அருகே அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.
தினந்தோறும் ஏராளமானோர் காலை, மாலை நேரங்களில் குழந்தைகளுடன் பூங்காவில் விளையாட செய்யவும், பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வந்தனர். தற்போது உடற்பயிற்சி கூடம் முழுவதும் புற்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.
உடற்பயிற்சி கட்டடம் விரிசிலடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறும் அவல நிலையும் உள்ளது.
இதனால் தற்போது உடற்பயிற்சி கூடம் காட்சிப்பொருளாகவே உள்ளது.
எனவே உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.