/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றங்கரை ஓரங்களில் உலா வரும் பன்றிகள் கூட்டம்
/
வைகை ஆற்றங்கரை ஓரங்களில் உலா வரும் பன்றிகள் கூட்டம்
வைகை ஆற்றங்கரை ஓரங்களில் உலா வரும் பன்றிகள் கூட்டம்
வைகை ஆற்றங்கரை ஓரங்களில் உலா வரும் பன்றிகள் கூட்டம்
ADDED : டிச 27, 2024 04:47 AM

பரமக்குடி மக்கள் அதிர்ச்சி
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றின் கரை ஓரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வரும் நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சி உட்பட அருகில் உள்ள ஆற்றங்கரை ஓரங்களில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் கூட்டமாக திரிகின்றன. ஆரம்ப காலங்களில் நகர் முழுவதும் கழிவுநீர் வாய்க்கால்களில் பன்றிகள் ஆங்காங்கே திரிந்தன.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முற்றிலும் பன்றிகள் ஒழிக்கப்பட்டு நகர் பகுதிகள் துாய்மையாக இருக்கின்றன.
மேலும் கடந்த காலங்களில் தொற்று நோய் பீதியில் இருந்த மக்கள் தற்போது நிம்மதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களாக வைகை ஆற்றின் கரையோரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக இரை தேடி உலா வருகின்றன. ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது மீண்டும் நகர் பகுதிகளில் பன்றிகள் உலா வருவதால் சிறு குழந்தைகள் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மேலும் குப்பை மேடுகள் மற்றும் வாறுகால்களில் திரியும் பன்றிகளால் தொற்று நோய் பீதி அதிகரித்துள்ளது.
எனவே பன்றிகளை வளர்ப்போர் அல்லது தாமாக திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.