/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கூட்டம்
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கூட்டம்
ADDED : அக் 29, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீரனுார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், மிளகாய் பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயத்தை கை விடும் நிலை உருவாகும்.
எனவே காட்டுப்பன்றிகளை சுடலாம் என்ற அரசு உத்தரவை விரைவில் முதுகுளத்துார், கமுதி பகுதியில் அமல்படுத்தி காட்டுப்பன்றி தொல்லையிலிருந்து விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

