/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் மிலாடி நபி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
/
ஏர்வாடியில் மிலாடி நபி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
ஏர்வாடியில் மிலாடி நபி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
ஏர்வாடியில் மிலாடி நபி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : செப் 05, 2025 11:25 PM
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் நேற்று மாலை 6:00 மணிக்கு மிலாடி நபி விழா நடந்தது.
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் செயலா ளர் சித்திக் லெவ்வை தலைமை வகித்தார். ஏர்வாடி தர்கா ஷரிப் ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம் முர்சல் இப்ராஹிம் கிராஅத் ஓதினார். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம் லெவ்வை, துணைத்தலைவர் முகமது சுல்தான் முன்னிலை வகித்தனர். கடலாடி வட்டார ஜமாஅத் உலமா சபை தலைவர் செய்யது பாரூக் ஆலிம் வரவேற்றார்.
கரூர் சவூதியா அரபிக் கல்லுாரி முதல்வர் சிராஜு தீன் அகமது மற்றும் நெல்லை பேட்டை அரபிக் கல்லுாரி முதல்வர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினர். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் லெவ்வை உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதினார்.
ஜாபர் சாதிக், முஹம்மது ரியாஸ், அல் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளிவாசல் முத்தவல்லி அம்ஜத் ஹுசேன் உட்பட பலர் பங்கேற்றனர். மிலாடி நபியை முன்னிட்டு நேற்று மதியம் 3:00 மணிக்கு ஏர்வாடி சந்தனக்கூடு தைக்காவில் இருந்து மதரஸா மாணவர்களின் ஊர்வலம் தர்கா வரை நடந்தது.