/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்பு
/
பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்பு
பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்பு
பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : ஜூன் 04, 2025 12:48 AM
பெரியபட்டிணம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 124ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு தர்கா வளாகம் முன்புறமுள்ள 70 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
பிரசித்தி பெற்ற பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை ஏராளமானோர் துாக்கி வந்தனர்.
நாட்டியக் குதிரைகள் முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஏராளமான பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் ஊர்வலமாக வந்தனர். தர்காவை மூன்று முறை வலம் வந்து பல்லக்கில் வைக்கப்பட்ட பச்சை வண்ண பிறைக் கொடி, தென்னங்கன்று, சந்தனக்குடம் கொண்டு வந்தனர். உலக நன்மைக்காக மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது.
புனித மக்பராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. மலர்கள் துாவப்பட்டன. பெரியபட்டினம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கிராமிய இன்னிசை கச்சேரி நடந்தது.
விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், தர்கா கமிட்டியாளர்கள் மற்றும் பெரியபட்டினம் அனைத்து சமுதாய மக்கள் செய்திருந்தனர்.