/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் ஒரு கி.மீ.,க்கு காவிரி குடிநீருக்கு புதிய குழாய் பதிப்பு
/
கடலாடியில் ஒரு கி.மீ.,க்கு காவிரி குடிநீருக்கு புதிய குழாய் பதிப்பு
கடலாடியில் ஒரு கி.மீ.,க்கு காவிரி குடிநீருக்கு புதிய குழாய் பதிப்பு
கடலாடியில் ஒரு கி.மீ.,க்கு காவிரி குடிநீருக்கு புதிய குழாய் பதிப்பு
ADDED : அக் 25, 2024 05:10 AM

கடலாடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கடலாடியில் இருந்து மலட்டாறு செல்லும் வழியில் காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்த பகுதிகளில் புதிய குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
கடலாடி மலட்டாறு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அடிக்கடி காவிரி குடிநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் பழுது ஏற்பட்டு அப்பகுதி விளைநிலங்கள்முழுவதும் குளங்களாக தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கடலாடியில் இருந்து மலட்டாறு செல்லும் பிரதான சாலையின் இடது பக்கத்தில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் செயல்பாட்டில் இயங்கி வருகிறது. தற்போது ஒரு கி.மீ., தொலைவிற்கு அதன் அருகே 42 செ.மீ., அகலத்திலும், ஆறு மீட்டர் நீளம் உள்ள இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் 2 வழித்தடங்களில் பிரதான குழாய்கள் உள்ளன. சேதமடையும் சமயத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டு புதிய குழாய்களின் வழியாக தண்ணீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
முதுகுளத்துார் சாலையில் இருந்து கடலாடி, மலட்டாறு வழியாக கடுகுச்சந்தை பெரிய தண்ணீர் தொட்டிக்கும் மற்றும் சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பிரதான குழாய் இவ்வழித்தடத்தில் அமைந்துள்ளது.

