/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு சட்டக் கல்லுாரி அருகே பயணிகள் நிழற்குடை தேவை
/
அரசு சட்டக் கல்லுாரி அருகே பயணிகள் நிழற்குடை தேவை
ADDED : ஜன 05, 2025 06:47 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு சட்டக் கல்லுாரி செயல்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு படிக்கின்றனர்.
பஸ்சில் செல்ல பயணிகள் நிழற்குடை இல்லாததால் திறந்தவெளியில் பஸ் ஏறி செல்கின்றனர். மழை, வெயில் காலங்களில் சிரமப்படுகின்றனர்.
எனவே ராமநாதபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான இடங்களில் பயணிகள் பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் பயணியர் நிழற்குடை அமைப்பது வாடிக்கையாக உள்ளது.
எனவே தேவையான இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.