/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
/
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
ADDED : அக் 09, 2024 04:49 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பட்டணம்காத்தான் அரசு குடியிருப்பில் வசிக்கும் செல்லமுத்து 48, புகையிலை பொருட்களை சப்ளை செய்வது தெரிய வந்தது.
செல்லமுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செல்லமுத்து மீது ராமநாதபுரம் நகர், கேணிக்கரை, உச்சிப்புளி, பாம்பன், போலீஸ் ஸ்டேஷ்னகளில் புகையிலை சப்ளை செய்ததாக வழக்குகள் உள்ளன.